அடிக்கடி மாதவிடாய் தள்ளிப் போகிறதா..?
இன்றைய சூழ்நிலையில் பெண்கள் அனைவரும் சந்திக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனைகளில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாயும் ஒன்றாகும்.
அதுவும் இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் 100-யில் 80% பெண்கள் காலம் தவறிய மாதவிடாய் பிரச்சனையை அதிகம் சந்திக்கின்றனர்.
நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி ஏற்படுவது, ஹார்மோனின் சமமற்ற நிலை இவையெல்லாம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதிலிருந்து விடுபட பக்கவிளைவுகள் இல்லாத ஒரு சில வழிகள் உள்ளது. தற்போது அவற்றை பார்ப்போம்.
- இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு அருந்தி வந்தால் மாதவிலக்கு தாமதம் தடுக்கப்படும். அத்துடன் தசை பிடிப்புகள் தவிர்க்கப்படும். இதற்கு ஒரு கப் தண்ணீர் எடுத்து, அதில் நறுக்கிய சில இஞ்சி துண்டுகளை போட்டு கொதிக்க வைத்து, இறுதியாக அதை வடிகட்டி அருந்தலாம்.
- ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து எடுத்துக் கொள்ளலாம். இது உடலில் காரத்தன்மையை அதிகரித்து மாதவிலக்கு நடைபெற தூண்டுதலாக அமையும்.
- ஒரு டீ ஸ்பூன் சீரகத்தை இரவு நேரத்தில் தண்ணீரில் கொதிக்க வைத்து, சிறிது நேரம் சிம்மில் வைத்திருக்கவும். இரவு முழுவதும் இது ஊற வேண்டும். காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
- அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலின் என்ற என்ஜைம் பெண்களுக்கான மாதவிலக்கை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் உடலில் வெள்ளை அணு மற்றும் சிவப்பு அணு உற்பத்திக்கு இது உதவிகரமாக இருக்கும். ஆகவே, சீரற்ற உதிரப் போக்கு பிரச்சினை இருப்பவர்களுக்கு இது நல்ல தீர்வு.
- மஞ்சளை உணவு அல்லது பாலில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இது கர்ப்பப்பை மற்றும் இடுப்பு பகுதிக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் எதிரொலியாக கர்ப்பப்பை விரிவடைந்து மாதவிலக்கு நடைபெற தூண்டுதலாக அமைகிறது. மஞ்சளை தண்ணீரில் கொதிக்க வைத்தும் அருந்தலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.