நாம் புதிதாக வாங்கும் பொருட்களில் உள்ள இந்த “குட்டி பாக்கெட்” எதற்காக தெரியுமா?
பல வீடுகளில், வீட்டின் ஈரப்பதம் அதிகரிப்பதால் பூஞ்சைத் தொல்லை ஏற்படுவது சகஜம்.
அதுவும், பிரித்தானியாவில் இந்த ஈரப்பதத்தால் உருவாகும் பூஞ்சைத் தொல்லையால் எக்சிமா முதல் ஆஸ்துமா வரையிலான பிரச்சினைகளால் அவதியுறுவோர் உண்டு.
இந்த பூஞ்சைத் தொல்லையை எளிதில் சமாளிக்க, நம் வீட்டிலிருக்கும் ஒரு பொருள் போதும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், புதிதாக ஷூ வாங்குவதிலிருந்து, இப்போது lateral flow test செய்யும் கிட் வாங்குவது வரை, அந்த பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்குள் ஒரு சிறிய பொட்டலம் ஒன்றைப் போட்டு வைத்திருப்பதைக் காண முடியும்.
அந்த பொட்டலத்திலிருக்கும் பொருள் சிலிக்கா ஜெல் (Silica gel) என்னும் பொருளாகும். இந்த சிலிக்கா ஜெல், நாம் வாங்கும் பொருட்கள் ஈரப்பதத்தால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அந்த ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக பார்சல்களுக்குள் போடப்படும் ஒரு பொருளாகும்.
இந்த சிலிக்கா ஜெல்லையே நம் வீட்டிலும் பயன்படுத்தலாம். அதாவது, ஜன்னல் ஓரம் அல்லது குளியலறைகளில் இந்த சிலிக்கா செல் பொட்டலங்களை போட்டு வைப்பதால் அவை ஈரத்தை உறிஞ்சி ஈரப்பதத்தால் பூஞ்சை உருவாகாமல் தடுக்கின்றன.
ஆனால், ஒரு எச்சரிக்கை! இந்த சிலிக்கா செல்லை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாத இடத்தில் வைப்பது நல்லது. காரணம், அவற்றை தவறுதலாக விழுங்கிவிட்டால் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம்...