ஜேர்மன் போர் வாகனங்கள் அச்சுறுத்தல்தான் என்பதை ஒப்புக்கொண்ட புடின்
ரஷ்யா - உக்ரைன் போரில், ஜேர்மனியின் முக்கியத்துவம் அதிகரித்துவருவதுபோல் தெரிகிறது. போர் துவங்கிய நேரத்தில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க தயக்கம் காட்டியது ஜேர்மனி.
ஆனால், ஜேர்மனி ஆயுதங்கள் வழங்க முடிவு செய்ததுமே, ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் எதிர்பார்த்ததுபோலவே ரஷ்யாவின் கோபத்தை சம்பாதித்துக்கொண்டுள்ளது ஜேர்மனி.
ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ள விடயம் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எரிச்சலையூட்டியுள்ள நிலையில், நம்பமுடியவில்லை, ஆனால் உண்மை, மீண்டும் நாம் ஜேர்மன் Leopard tanks என்னும் போர் வாகனங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளோம் என்று கூறியுள்ளார் அவர்.
ஆக, ரஷ்யா ஜேர்மனியைக் கண்டு அஞ்சுவதை புடின் தன் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளாரா என்பது புரியவில்லை.
The gunners of the 28th Brigade, together with the air reconnaissance of the 4th brigade of the National Guard, have destroyed the command post and ammunition depot of the occupiers.
— Defense of Ukraine (@DefenceU) February 1, 2023
1/2 pic.twitter.com/UM2nAUJcEZ
ஏற்கனவே மோதிக்கொண்ட ரஷ்யாவும் ஜேர்மனியும்
ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்த காலத்தில், இரண்டாம் உளகப்போரின் இறுதி நேரத்தில், Battle of Stalingrad என்றொரு முக்கியத்துவம் வாய்ந்த போர் நடைபெற்றது.
அதில் சோவியத் யூனியனும் ஜேர்மனியும் மோதிக்கொண்டன. ஜேர்மனி போரில் தோல்வியை சந்தித்தது. இரத்தம் ஆறாக ஓடிய அந்தப் போரில் சுமார் ஒரு மில்லியன்பேர் கொல்லப்பட்டார்கள், சுமார் 91,000 ஜேர்மன் வீரர்கள் சோவியத் யூனியனிடம் சிக்கிக்கொண்டார்கள். அது இரண்டாம் உலகப் போருக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அந்த போரில் ஜேர்மானியர்களின் போர் வாகனங்களை சந்தித்ததைத்தான் இப்போது புடின் மேற்கோள் காட்டுகிறார். அதைத்தான் நாம் மீண்டும் ஜேர்மன் போர் வாகனங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளோம் என்று கூறியுள்ளார் புடின். ஆக, அவர் அச்சத்தில் கூறுகிறாரா அல்லது ஜேர்மனியின் தோல்வியைக் குத்திக்காட்டும் வகையில் கூறுகிறாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.