அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிகாலம் முடிந்துவிட்டதா? இணையதள பக்கத்தில் வெளியான பதிவால் சர்ச்சை
டொனால்டு டிரம்ப்பின் பதவி காலம் முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க அரசு இணையதள பக்கத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த பதிவில் டொனால்டு டிரம்பின் பதவிகாலம் நேற்று இரவு 7 மணி 40 நிமிடம் 41 நொடியுடன் முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் கழித்து அந்த பதிவு நீக்கப்பட்டது. இந்நிலையில் இப்பதிவு குறித்து அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மேலும் அரசு இணையதள பக்கத்தில் வெளியான இப்பதிவு பதிவு ஹேக்கிங் செய்யப்பட்டதா? அல்லது அதிகாரிகள் வேண்டுமென்றே அவ்வாறு பதிவு செய்தனரா? என்பது குறித்த விவரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
