ரஷ்யாவைக் கண்டு அமெரிக்காவுக்கு பயமா?: புடினுடைய இரகசிய காதலி மீது தடை விதிக்க பயந்ததாக தகவல்
புடினுடைய இரகசிய காதலி மீது தடை விதித்தால் புடினுடைய கோபத்துக்கு ஆளாகக்கூடும் என அஞ்சி, அவர் மீது தடைகள் விதிக்கும் திட்டத்தை கடைசி நேரத்தில் அமெரிக்கா கிடப்பில் போட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான Alina Kabaeva (39), புடினுடைய இரகசிய காதலி என அழைக்கப்படுபவர். அவர் வேறொரு நாட்டில் பாதுகாப்பாக மறைந்திருப்பதாக கருதப்பட்ட நிலையில், இப்போது புதிய தோற்றத்துடன் வெளியே வந்து தொலைக்காட்சிகளில் பேட்டியளித்துக்கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதும், புடினுக்கு நெருக்கமானவர்கள் மீது தடைகள் விதிக்கத் திட்டமிட்ட அமெரிக்கா, Alina மீதும் தடைகள் விதிக்க திட்டமிட்டுள்ளது.
ஆனால், Alina மீது தடைகள் விதித்தால், அது புடினை தனிப்பட்ட முறையில் தாக்கியது போலாகிவிடும் என்றும், அதனால் இரு நாடுகளுக்குமிடையில் பிரச்சினை பெரிதாகிவிடும் என்றும் கருதி, வாஷிங்டன் அலுவலர்கள் கடைசி நேரத்தில் அவர் மீது தடைகள் விதிக்கும் திட்டத்தைக் கிடப்பில் போட்டதாக Wall Street Journal என்னும் பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆனாலும், தாங்கள் சிலர் மீது தடைகள் விதிக்க தயாராக உள்ளதாகவும், இதுவரை அவர்கள் மீது தடைகள் விதிக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் மீது தடைகள் விதிப்பதற்கான சரியான தருணத்துக்காக தாங்கள் காத்திருப்பதாகவும், அமெரிக்க அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.