இந்தியாவில் விளையாடுகிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ? கால்பந்து ரசிகர்கள் உற்சாகம்
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆசிய கால்பந்து அணியுடன் தனது புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொண்டதை தொடர்ந்து, அவர் இந்தியாவில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று இந்திய கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்துடன் தங்கள் எதிர்பார்ப்பை முன்வைத்து வருகின்றனர்.
அல் நாசர் அணியில் ரொனால்டோ
போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய பிறகு, தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார்.
அல் நாசர் அணிக்காக 2025ம் ஆண்டு வரை ஒப்பந்தம் ஆகியுள்ள ரொனால்டோ வருடத்திற்கு 200 மில்லியன் பவுண்டுகள் ஊதியம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Can’t wait to get started! ?? pic.twitter.com/Zow3eQ3S44
— AlNassr FC (@AlNassrFC_EN) December 31, 2022
இவை ஒருபுறம் இருக்க ரொனால்டோ தற்போது ஆசிய கால்பந்து அணியான அல் நாசர் கிளப்பில் இணைந்துள்ளதால், இனி ஐரோப்பிய லீக் போட்டிகளில் ரொனால்டோவை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ரொனால்டோ விளையாடுவாரா?
சவுதி அரேபியாவில் 1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அல் நாசர் கால்பந்து கிளப் ஆனது, சவுதி அரேபியாவில் தொழில் முறை லீக் போட்டிகளில் விளையாடும் முக்கியமான 16 அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சவுதி கால்பந்து லீக் தொடர்களில் 9 முறை அல் நாசர் கால்பந்து கிளப் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இது அந்த லீக் தொடரில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாகும், முதலிடத்தில் 18 சாம்பியன் பட்டங்களுடன் சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணி உள்ளது.
Cristiano Ronaldo-கிறிஸ்டியானோ ரொனால்டோ(Twitter)
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தங்கள் அணியுடன் அல் நாசர் கால்பந்து கிளப் இணைப்பதன் மூலம் உள்ளூர் லீக் போட்டிகளிலும் சரி, ஆசிய கால்பந்து லீக் போட்டிகளிலும் சரி தங்களை சிறப்பாக முன்னிலை படுத்தி கொள்ள அல் நாசர் கால்பந்து அணி முயற்சிக்கும் என தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இதன் மூலம் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
அத்துடன் இந்தியாவிலும் ரொனால்டோ முதல் முறையாக கால்பந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
(Twitter)
இந்தியாவில் நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளை பொறுத்து ஆசிய கால்பந்து தொடருக்கான இந்திய அணிகள் தகுதி பெறுவது முடிவாகும்.
இவ்வாறு தகுதி பெறும் இந்திய அணி 2023 மற்றும் 2024ம் ஆண்டு ஆசிய கால்பந்து லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.