மெஸ்ஸி மற்றும் எம்பாப்பேவை சம்பளத்தில் முந்தினார் ரொனால்டோ! இத்தனை மடங்கு அதிகமா?
ஊதியத்தில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி பல மடங்கு முன்னேறியுள்ளார் ரொனால்டோ.
சவூதி அரேபியா கிளப் அல்-நஸ்ருடன்...
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியா கிளப் அல்-நஸ்ருடன் பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ரொனால்டோவின் புதிய ஒப்பந்தம், PSG நட்சத்திரங்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கைலியன் எம்பாப்பே ஆகியோரை சம்பளத்தின் அடிப்படையில் முந்தி அவரை நம்பர் 1 கால்பந்து வீரராக ஆக்கியுள்ளது.
Getty Images
200 மில்லியன் பவுண்டுகள்
ரொனால்டோ 2.5 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார், இதன் மூலம் அவருக்கு வருடத்திற்கு 200 மில்லியன் பவுண்டுகள் (ஒப்புதல் ஒப்பந்தங்கள் உட்பட) கிடைக்கும்.
மெஸ்ஸியைப் எடுத்து கொண்டால் இப்போது சம்பளத்தைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கியுள்ளார், ஏனெனில் அவர் ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் பவுண்டுகள் வரை ஊதியம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.