IS பயங்கரவாதி அபு-பிலால் அல்-மினுக்கி கொல்லப்பட்டார்: அமெரிக்க-நைஜீரிய படைகள் அதிரடி
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட அபு-பிலால் அல்-மினுக்கி
இஸ்லாமிய அரசு(IS) அமைப்பின் முக்கிய தலைவரான அபு-பிலால் அல்-மினுக்கி, அமெரிக்கா மற்றும் நைஜீரிய கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
லேக் சாட் பேசின் என்ற பகுதியில் உள்ள குறிப்பிட்ட இடத்தை நோக்கி அமெரிக்க மற்றும் நைஜீரிய கூட்டுப்படைகள் நடத்தி தாக்குதலில் அபு-பிலால் அல்-மினுக்கி கொல்லப்பட்டுள்ளார்.
Overnight, Nigeria and the United States recorded a significant example of effective collaboration in the fight against terrorism.
— Bola Ahmed Tinubu (@officialABAT) May 16, 2026
Our determined Nigerian Armed Forces, working closely with the Armed Forces of the United States, conducted a daring joint operation that dealt a…
இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டு ஜனாதிபதி போலா அகமது தினுபு, இந்த துல்லியமான தாக்குதலில் அபு - பிலால் அல் - மினுக்கி மட்டுமின்றி அவரது முக்கிய சில தளபதிகளும் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டிரம்ப் பதிவு
“Tonight, at my direction, brave American forces and the Armed Forces of Nigeria flawlessly executed a meticulously planned and very complex mission to eliminate the most active terrorist in the world from the battlefield. Abu-Bilal al-Minuki, second in command of ISIS…” -… pic.twitter.com/KF8MYet9CB
— The White House (@WhiteHouse) May 16, 2026
இந்த தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐஎஸ் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அபு - பிலால் இழப்பு அந்த கட்டமைப்பை நிச்சயம் சிதைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |