டான்பாஸ் பகுதியில் தோல்வியை சந்தித்து வருகிறதா உக்ரைன்?: நகரங்களை மண்மேடாக்கிவரும் ரஷ்யப்படைகள்
கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள நகரங்களை ரஷ்யப்படைகள் மக்கள் வாழ இயலாத மண்மேடாக்கி வரும் நிலையில், டான்பாஸ் பகுதியில் உக்ரைன் தோல்வியைச் சந்தித்து வருகிறதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வைக் கைப்பற்ற முடியாததால், கிழக்கு உக்ரைனையாவது கைப்பற்றியாகவேண்டும் என்று தீவிரமாக அப்பகுதியில் ரஷ்யப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், Luhansk பகுதியிலிருந்து தாங்கள் பின்வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
அப்படி உக்ரைன் படையினர் Luhansk பகுதியில் இருந்து வெளியேறுவார்களானால், அது உக்ரைனுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்.
ஏனென்றால், சிறப்பு இராணுவ ஆபரேஷன் என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஆரம்ப நாட்களிலேயே, Luhansk மற்றும் Donetsk மீதுதான் கண்வைத்தார் புடின். ஆக, அந்த இரண்டு பகுதிகளையும் எப்படியாவது கைப்பற்றிவிடத் துடிக்கிறார் அவர்.
அப்பகுதியில் உள்ள பல இடங்கள், குறிப்பாக Severodonetsk பகுதியிலுள்ள கட்டிடங்கள், 90 சதவிகிதம் சேதமடைந்துவிட்டன.
Lyman மற்றும் Severodonetsk ஆகிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், Lyman மற்றும் Severodonetsk ஆகிய பகுதிகள் தங்களுடையவை என ஆக்கிரமிப்பாளர்கள் நினைப்பார்களானால், அவர்கள் நினைப்பது தவறு, Donbas உக்ரைனுடையதாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.