அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்? கமலுடன் கை கோர்க்கிறாரா விஜயகாந்த்!
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 6ம் திகதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.
மாறுபுறம் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய சாமக கட்சியும், திமுக கூட்டணியிலிருந்த விலகிய ஐஜேகே-வும் மநீம தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து கமல் தலைமையில் 3வது அணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேசமயம், கூட்டணிக்கு கதவுகள் திறந்துள்ளதாக கமல் கூறினார்.
இவ்வாறான சூழலில் அதிமுக அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெறுவதாக இருந்த அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்தாகியுள்ளது.
இதனிடையே, சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை ஈடுபட்டார்.
தொகுதிப்பங்கீட்டில் அதிமுக மீது தேமுதிக அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய்யத்துடன் தேமுதிக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.