இஷா அம்பானிக்காக உருவாக்கப்பட்ட சொகுசு வைர மாளிகை., இதன் விலைமதிப்பு என்ன தெரியுமா?
இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகள் இஷா அம்பானி, வெறும் 32 வயதிலேயே ரிலையன்ஸ் ரீடெயில் இயக்குநராக இருக்கும் திறமையான தொழிலதிபராவார்.
2018-ல் ஆனந்த் பிரமாலுடன் திருமணம் செய்த இஷாவுக்கு, ஆடியா மற்றும் கிருஷ்ணா என்ற இரட்டையர் குழந்தைகள் உள்ளனர்.
திருமணக்குப் பிறகு, ஆனந்த் பிரமாலின் பெற்றோர் ஸ்வாதி மற்றும் அஜய் பிரமால் தங்கள் மகள், மருமகளுக்கு 'Gulita' எனும் அற்புதமான மாளிகை போன்ற வீட்டை பரிசளித்துள்ளனர்.
மும்பை வொர்லியில் அமைந்துள்ள இந்த 50,000 சதுர அடி கொண்ட பங்களாவை Eckersley O’Callaghan எனும் லண்டன் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த வைரக் கருப்பொருள் கொண்ட பங்களாவில், சிறப்பான விளக்குகள், மூன்று ஆடம்பரமான அடித்தளங்கள், அரண்மனை மாதிரியான ஹால்கள், வசதியான தங்கும் அறைகள், அதிக சுற்றளவான படிப்பு அறைகள், சொகுசான லவுஞ்ச் பகுதிகள், ஆடை அறைகள், உட்புற நீச்சல் குளம் மற்றும் பல வசதிகள் உள்ளன.
மொத்தமாக, இந்த வீட்டின் ஆரம்ப கட்ட மதிப்பு ரூ.452 கோடி என இருந்தாலும், அதன் மேம்பாட்டு வேலைகளுக்காக மட்டும் ரூ.500 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இஷா மற்றும் ஆனந்த் இருவரும் கலை ஆர்வலர்களாக இருப்பதால், வீட்டின் ஒவ்வொரு பாகமும் அற்புத ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Isha Ambani house, Gulita mansion Isha Ambani, Isha Ambani net worth, Isha Ambani lifestyle, Isha Ambani and Anand Piramal home, Ambani daughter house, Diamond themed mansion Mumbai, 500 crore Gulita bungalow, Isha Ambani luxury home, Piramal family gift to Isha Ambani