ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்: கண்களை கவர்ந்த இஷா அம்பானியின் ஆடை!
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் அவரது சகோதரி இஷா அம்பானி அணிந்திருந்த நீல நிற ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
அவர்களின் மூன்றாவது நாள் நிகழ்வான சங்கீத விழா ஜூலை 5ம் திகதி நீதா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
இதில் கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர் என பலரும் கலந்து கொண்டு தங்கள் பேஷன் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
கவனம் ஈர்த்த இஷா அம்பானி
பல பிரபலங்கள் தங்களின் பேஷன் ஆடைகளை வெளிப்படுத்தி இருந்தாலும், இஷா அம்பானி தான் தனது கண்கவர் ஆடையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இஷா அம்பானி, ஷியாபரெல்லி வடிவமைத்த மின்சார நீல சேலையில் மிகவும் கவர்ச்சிகரமாக தோன்றினார்.
இது ஒரு தனித்துவமான ஆடை, பிராண்டின் பால் 2024 சேகரிப்பில் இருந்து உத்வேகம் பெற்றது, மேலும் ஷியாபரெல்லி இதுவரை செய்த இரண்டாவது சேலை இதுதான், முதலாவது 1935 இல் செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |