யார் இந்த சத்குரு? உலக கோடீஸ்வரர்களையும் மிரள வைத்த சொத்து - எவ்வளவு தெரியுமா?
உலகம் முழுவதும் பிரபலமான ஆன்மீகவாதி என்றால் இந்தியாவை சேர்ந்த சத்குருவாக தான் இருக்கக்கூடும்.
அவருடைய சமய போகங்கள் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் குறித்து அடிக்கடி கேட்டு இருப்பீர்கள். ஆனால் அவருக்கென இருக்கும் சொத்து குறித்து யாருக்கும் தெரியாது. அது பற்றி பார்க்கலாம்.
யார் இந்த சத்குரு?
உலகில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருக்களில் இவரும் ஒருவர்.
3 செப்டம்பர் 1957 அன்று கர்நாடகாவில் உள்ள மைசூரில் சுசிலா மற்றும் டாக்டர் வாசுதேவ் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
இவர் தனது 25 வயதில் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தைப் பெற்றதாகவும், தனது வாழ்க்கையை ஆன்மீக பயிற்சிக்கு மாற்றியதாகவும் பல நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நினைவாற்றல், யோகா மற்றும் தியானம் மூலம் ஆன்மீகத்தை பலருக்கும் கற்பித்துக்கொடுக்கிறார். சத்குருவின் கற்பித்தல் பாரம்பரிய யோகப் பயிற்சிகள் மற்றும் நவீன அறிவியலின் கலவையாக இருப்பதாக பயிற்சி பெறுபவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் ஈஷா அறக்கட்டளை நிறுவி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.
1983 ஆம் ஆண்டில் மைசூரில் தனது முதல் யோகா வகுப்பை ஆரம்பித்தார். இதில் முதலில் 7 பேர் தான் இருந்துள்ளனர்.
ஒரு சில நாட்கள் கடந்து செல்லும் போது தான் பலரும் வருகை தந்தனர். பின் ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவிலும் தனது யோகா வகுப்புகளை ஆரம்பித்தார்.
இவர் நிறுவி வருகின்ற ஈஷா அறக்கட்டளையானது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கப்பூர், கனடா, மலேசியா, உகாண்டா, சீனா, நேபாளம், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஈஷா அறக்கட்டளை யோகா பயிற்சிகளை வழங்கி வருகிறது.
2017 ஆம் ஆண்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் வடிவமைத்த 112 அடி ஆதி யோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி ‘ஈஷா யோகா’ மையத்தில் திறந்து வைத்தார்.
சொத்து மதிப்பு
இவர் ஒரு காலத்தில் தொழிலதிபராக இருந்ததால், பணத்தை எப்படி முதலீடு செய்வது என்பது பற்றி தெரியும்.
அவர் ரியல் எஸ்டேட், வணிகம் போன்றவற்றில் முதலீடு செய்துள்ளதோடு, பல வாகனங்களின் உரிமையாளராகவும் உள்ளார்.
சத்குருவின் நிகர மதிப்பு 2024 இல் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் நிலம் மற்றும் சொத்துக்களின் குறிப்பிடத்தக்க உரிமையும் அவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.