இஷான் கிஷன், திலக் வர்மா ருத்ரதாண்டவம்! ஜிம்பாப்வேயை சரித்த அபிஷேக்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா 219 ஓட்டங்கள்
ஹராரேயில் நடந்த டி20 போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் குவித்தது.
இஷான் கிஷன் (Ishan Kishan) 44 பந்துகளில் 81 ஓட்டங்களும் (2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்), திலக் வர்மா (Tilak Varma) 29 பந்துகளில் 60 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசினர்.

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பிரையன் பென்னெட் 32 (19) ஓட்டங்களில் எடுத்தார்.

அபிஷேக் ஷர்மா 3 விக்கெட்டுகளும், யஷ் தாக்கூர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், பிஷ்னாய், ஷிவம் தூபே மற்றும் திலக் வர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |