14 சிக்ஸர்கள்! 39 பந்துகளில் 125 ஓட்டங்கள்..கேப்டன் இஷான் கிஷன் ருத்ர தாண்டவம்
விஜய் ஹசாரே கிண்ணப் போட்டியில் இஷான் கிஷன் (Ishan Kishan) 33 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.
இஷான் கிஷன் ருத்ர தாண்டவம்
அகமதாபாத்தில் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் அணிகள் மோதின.
𝗥𝗮𝘄 𝗮𝗻𝗱 𝗥𝗮𝗽𝘁𝘂𝗿𝗼𝘂𝘀 💪
— BCCI Domestic (@BCCIdomestic) December 18, 2025
🎥 Ishan Kishan's day out with the bat in Pune 👏#SMAT | @ishankishan51 | @IDFCFIRSTBank pic.twitter.com/cu7grxlPLA
முதலில் களமிறங்கிய ஜார்கண்ட் அணியில் ஷிகார் மோகன் 44 ஓட்டங்களும், விராட் சிங் 88 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
குஷாகர 47 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாச, அணித்தலைவர் இஷான் கிஷன் ருத்ர தாண்டவம் ஆடினார்.

நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், 39 பந்துகளில் 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் விளாசினார்.

413 ஓட்டங்கள் எடுத்து வெற்றி
இதன்மூலம் ஜார்கண்ட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் 412 ஓட்டங்கள் குவித்தது. அபிலாஷ் ஷெட்டி 4 விக்கெட்டுகளும், பாட்டீல் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய கர்நாடகா அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 413 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) 118 பந்துகளில் 147 ஓட்டங்கள் (7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள்) விளாசினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |