தோனியை ஒரு ரன் எடுக்க விடாமல் தடுத்த இஷான் கிஷன்! ஸ்டெம்பை பதம் பார்த்த அபார ரன் அவுட் வீடியோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியை ஒரு ரன் ஓட விடாமல் செய்து பந்தை நேராக ஸ்டெம்பில் அடித்து மிரட்டிய இஷான் கிஷன் வீடியோ வைரலாகியுள்ளது.
59வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 16 ஓவர்களில் வெறும் 97 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
அந்த அணியின் கேப்டன் தோனி மட்டுமே சொல்லி கொள்ளும் வகையில் 36 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். 16வது ஓவரின் கடைசி பந்தில் கடைசி விக்கெட்டுக்கு தோனியும், முகேஷும் விளையாடி கொண்டிருந்தனர்.
மெரிடித் வீசிய பந்து தோனியின் தலைக்கு மேலே பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடன் சென்றது. இதையடுத்து எப்படியாவது ஒரு ரன் எடுக்க வேண்டும் என தோனி எதிர் திசை நோக்கி ஓடி வர, முகேஷும் ஓடினார்.
ஆனால் இஷான் கிஷன் அற்புதமாக பந்தை ஸ்டெம்பை நோக்கி வீசி முகேஷை அவுட்டாக்கி தோனி ஒரு எடுக்க நினைத்ததை தடுத்து நிறுத்தினார்.
அவரின் அபாரமான ரன் அவுட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.