வங்கி ஊழியராக பணியாற்றும் இஷான் கிஷன்: வைரலாகும் புகைப்படங்கள்
இந்திய கிரிக்கெட் அணி வீரரான இஷான் கிஷன் RBI வங்கி ஊழியராக பணியாற்றும் புகைப்படங்கள் வைரலாகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான இஷான் கிஷன், இந்திய ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இஷான் கிஷன்
அதிரடி துடுப்பாட்ட வீரரான இஷான் கிஷனுக்கு (Ishan Kishan) விளையாட்டுப் பிரிவின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) உதவி மேலாளரர் பணி கிடைத்தது.
என்றாலும் அணியில் இருந்து விலகியிருந்த இஷான், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்க, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.
புகைப்படம்
இந்த நிலையில், சமீபத்தில் RBI வங்கிக்கு சென்ற இஷான் கிஷன் அங்குள்ள ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத இஷான் கிஷன், உள்நாட்டு தொடரான துலீப் கிண்ணத்தில் ஈஸ்ட் ஸோன் அணியை இஷான் கிஷன் வழிநடத்துவார் என்று தெரிய வந்துள்ளது.
இந்தத் தொடர், ஆகஸ்ட் 23-ஆம் திகதி தொடங்க உள்ளதால் இடைப்பட்ட காலத்தில், இஷான் ஜார்கண்டில் உள்ள RBI-யின் கிளையில் தனது உதவி மேலாளர் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது வங்கியில் சக ஊழியர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |