ரோகித் அதிரடி, இஷான் முதல் அரைசதம்! மே.தீவுகளுக்கு 365 ஓட்டங்கள் இலக்கு
டிரினிடாட் டெஸ்டில் இந்திய அணி 365 ஓட்டங்களை வெற்றி இலக்காக மேற்கிந்திய தீவுகளுக்கு நிர்ணயித்துள்ளது.
சிராஜ் மிரட்டல் பந்துவீச்சு
இந்த டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 255 ஓட்டங்களும் எடுத்தன. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 2வது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 181 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
3.4-0-12-4 ?
— ICC (@ICC) July 23, 2023
Mohammed Siraj was in some form this morning in Port of Spain ?#WTC25 | ? #WIvIND: https://t.co/6Jf5OJLDbd pic.twitter.com/fhLeZ5YdYh
இஷான் கிஷன் ருத்ர தாண்டவம்
ஜெய்ஸ்வால் 38 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 57 (44) ஓட்டங்கள் விளாசினார்.
ருத்ர தாண்டவம் ஆடிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், 34 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்தார்.
ICC (Twitter)
சுப்மன் கில் 29 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 365 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்து களமிறங்கிய மே.தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
AP
AP photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |