வர்ணனையாளராக உருவெடுக்கிறார் இஷாந்த் சர்மா: குவியும் பாராட்டு
முதல்முறையாக வர்ணனையாளராக இஷாந்த் சர்மா செயலாற்ற உள்ளார்.
கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா
தன்னுடைய 19 வயதில், நட்சத்திர துடுப்பாட்டக்காராக வலம் வந்த ரிக்கி பாண்டிங் விக்கெட்டை வீழ்த்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர்தான் இஷாந்த் சர்மா.
இதுவரை இவர் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார், 311 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒருவர் மட்டும்தான் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சிறப்பை பெற்றுள்ளார்.
குவியும் வாழ்த்துக்கள்
இந்நிலையில், இஷாந்த் சர்மா முதல்முறையாக வர்ணனையாளராகப்போகிறார். இவர் இந்தியா-மே.இ.தீவுகள் அணிகள் மோதும் போட்டியில் ஹிந்தி வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Ishant Sharma, whose only 10-wicket haul in Tests came against the #WestIndies - will be in our comm box for India's upcoming series!?️#SabJawaabMilenge only on #JioCinema ✨#WIvIND | @ImIshant pic.twitter.com/gL0xNxnok1
— JioCinema (@JioCinema) July 9, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |