கொல்லப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் முக்கிய தலைவர்! அமெரிக்க-ஈராக் கூட்டு அதிரடி இராணுவ நடவடிக்கை
அமெரிக்க-ஈராக் கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்க-ஈராக் கூட்டு இராணுவ நடவடிக்கை
ஈராக் உளவுத்துறை மற்றும் அமெரிக்க கூட்டு இராணுவப் படை இணைந்து நடத்திய துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில், உலகளாவிய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி வந்த முக்கிய தலைவன் அபு காதிஜா கொல்லப்பட்டுள்ளார்.
அபு காதிஜாவின் பின்னணி
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இரண்டாவது மிக முக்கிய தளபதியாக அபு காதிஜா செயல்பட்டு வந்தார்.
உலகெங்கிலும் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகளை ஈராக்கிலிருந்து அபு காதிஜா ஒருங்கிணைத்து வந்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள், நிதி மற்றும் பிற பயங்கரவாத வளங்களை உலக நாடுகளுக்கு அனுப்பி வந்ததில் அபு காதிஜாவின் பங்கு மிகப்பெரியது.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதலானது இவரது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தான் செயல்பட்டு வந்தது.
U.S. Central Command forces, in cooperation with Iraqi Intelligence and Security Forces, conducted a precision airstrike eliminating the Global ISIS #2 leader, Chief of Global Operations and the Delegated Committee Emir Abdullah Maki Musleh al-Rifai, known as Abu Khadija. pic.twitter.com/piQtx0QUof
— OSINTWarfare (@OSINTWarfare) March 15, 2025
2023-ம் ஆண்டு அமெரிக்கா அவரை உலக தீவிரவாத தடை செய்யப்பட்ட நபராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதிரடி தாக்குதல்
ஈராக்கின் அல் அன்பர் பகுதியில் அபு காதிஜாவின் பயங்கரவாத நடமாட்டம் இருப்பது ஈராக் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அமெரிக்காவின் கூட்டு ராணுவத்துடன் இணைந்து, ஈராக் உளவுத்துறை அபு காதிஜாவின் பயங்கரவாத நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தது.
இந்நிலையில், அபு காதிஜாவின் மறைவிடம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அமெரிக்க ராணுவம் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் அபு காதிஜா மற்றும் அவனது கூட்டாளியான மற்றொரு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத கூட்டாளியும் கொல்லப்பட்டனர்.
டி.என்.ஏ மரபணு சோதனைக்கு பிறகு அபு காதிஜா கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க கூட்டு இராணுவ கமாண்டர் ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா மற்றும் ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி ஆகியோர் இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை பாராட்டி உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |