குடும்பத்துடன் வெடித்துச்சிதறிய ISIS தலைவர்! சிரியாவில் அதிரடி ஆப்பரேஷன் நடத்திய அமெரிக்கா
பயங்கரவாத இயக்கமான ISIS அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி நேற்று இரவு கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரைஷி (Abu Ibrahim al-Hashimi al-Qurayshi), புதன்கிழமையன்று வடமேற்கு சிரியாவில் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிபர் ஜோ பிடன் வியாழக்கிழமை அறிவித்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை (Abu Bakr al-Baghdadi) கொன்ற 2019 நடவடிக்கைக்குப் பிறகு சிரியா நாட்டில் நடந்த மிகப்பெரிய அமெரிக்கத் தாக்குதல் இதுவாகும்.
அமெரிக்கப் படைகள் அவரது வளாகத்தை நெருங்கியபோது குரேஷி தன்னைத்தானே வெடிக்கச் செய்துகொண்டார் என பைடன் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த குண்டுவெடிப்பில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், எத்தனை பேர் என்பதில் அமெரிக்காவுக்கும் சிரிய சிவில் பாதுகாப்புக் குழுவிற்கும் முரண்பாடு இருந்தது.
பென்டகனின் கூற்றுப்படி, அமெரிக்க உயிரிழப்புகள் எதுவும் இல்லை.