ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்... வந்த எச்சரிக்கை: முக்கிய இடங்களில் குவிக்கப்படும் பொலிசார்
அமெரிக்காவில் குறிப்பிட்ட மாகாணத்தில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் வணிக மையங்களில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை வந்ததையடுத்து, பொலிசார் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் Northern Virginia மாகாணத்தில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் வணிக மையங்களை தாக்க கூடும் என்று சட்ட அமலாக்கம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த வியாழக்கிழமை Northern Virginia-வில் உள்ள வணிகவளகாங்களுக்கு சாத்தியமான பொது பாதுகாப்பு பாதிப்புகள் பற்றி தங்களுக்கு தகவல் கிடைத்ததாக Fairfax County பொலிஸ் தலைவர் Chief Kevin Davis கடந்த வெள்ளிக் கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
ஆனால், எதற்கு திடீரென்று இப்படி ஒரு பாதுகாப்பு என்பதை அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகமான சிபிஎஸ் நியூஸ், இந்த பாதுகாபு எல்லாம் ஐ.எஸ் அமைப்பு காரணமாகத் தான் எனவும், ஐ.எஸ் அமைப்பு விடுத்த அச்சுறுத்தலுக்கு பின்னரே இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமை Washington, DC-க்கு வெளியே அமைந்துள்ள Fair Oaks Mall-ஐ சுற்றி பொலிசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவதை காண முடிந்தது.
போக்குவரத்து மையங்கள், வணிகவளாகங்கள் போன்ற மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் பொலிசாரை அதிகப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.