லண்டன் நகரை நடுங்கவைத்த சம்பவத்தில் சிறுவனின் புகைப்படம் வெளியானது: ஆபத்தான நிலையில் மூன்றாவது நபர்
வடக்கு லண்டனில் இஸ்லிங்டன் பகுதியில் நடந்த இரட்டைக் கொலையில், பரிதாபமாக பலியான சிறுவனின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கத்திக்குத்து காயங்களுடன்
இஸ்லிங்டன் பகுதியில் வியாழனன்று இரவு நடந்த கொலைவெறித் தாக்குதலில், 15 வயது சிறுவன் லியோனார்டோ ரீட் பரிதாபமாக பலியானான்.
@PA
இன்னொரு 23 வயது இளைஞரும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையே, 28 வயது நபர் ஒருவரும் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கபட்டு, ஆபத்தான நிலையில், சிகிச்சையில் உள்ளார்.
வடக்கு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், ஆனால் அவரது உடல்நிலை உயிருக்கு ஆபத்தானதாக இல்லை என்று நம்பப்படுகிறது. இதனிடையே, இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும், 46 வயது நபரை பொலிசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
வடக்கு லண்டன் காவல் நிலையத்தில்
அவர் தற்போது வடக்கு லண்டன் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வியாழன் அன்று இஸ்லிங்டனில் உள்ள எல்தோர்ன் சாலையில் கத்தியால் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
Image: Met Police
ஒரு குழுவினர் இசை வீடியோவை படம்பிடித்துக் கொண்டிருந்த போது, வாக்குவாதம் வன்முறையாக வெடித்துள்ளது. இதில் மூன்று பேர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற அவசர மருத்துவ உதவிக் குழுவினர், தீவிரமாக முயற்சி முன்னெடுத்தும், சிறுவன் லியோனார்டோவை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே, நள்ளிரவு கடந்த நிலையில், இரண்டாவது நபர் 23 வயது இளைஞர், மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. மூன்றாவது நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |