லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்த ஏவுகணைகள்
லெபனான் தலைநகரை குறிவைத்து இஸ்ரேல் சமீபத்தில் புதிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
பெய்ரூட் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை இஸ்ரேல் துல்லியமான தாக்குதல் என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும் இஸ்ரேலின் இந்த தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா எந்தவொரு கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தரப்புகள் ஹிஸ்புல்லா அமைப்பினரை தங்கள் ஆயுதங்களை கைவிடுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினரை ஆயுதம் இல்லாத அமைப்பாக மாற்ற ராணுவத்தினருக்கு லெபனான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கிடையில் ஹிஸ்புல்லா ராணுவ திறனை மீண்டும் கட்டமைக்க முயற்சித்து வருவதாக இஸ்ரேல் அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டை லெபனான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |