லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: வான்வழித் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படைகள் தாக்குதல்
தெற்கு லெபனானின் புகழ்பெற்ற துறைமுக நகரான டைர் அருகே உள்ள தவுரா கிராமத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வான்வழித் தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் தென் கிழக்கு கிராமமான க்ஃபர் சவுபா மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் இந்த இரண்டு தாக்குதல்களிலும் 8 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
மேல் குறிப்பிட்டுள்ள இந்த தாக்குதலை லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் டைர் மாகாணத்தில் உள்ள 6 கிராம மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த தாக்குதலானது நடந்துள்ளது.
இதற்கு முன்னதாக லெபனானின் ஹிஸ்பில்லா இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு ராக்கெட் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மற்றொன்று தரைப்பகுதியில் விழுந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |