900 ஆண்டுகள் பழமையான லெபனான் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்: திருப்புமுனை வெற்றியா?

Benjamin Netanyahu Israel Lebanon Israel-Hamas War
By Thiru Jun 01, 2026 12:47 AM GMT
Report

லெபனானில் 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட்(Beaufort) கோட்டையை இஸ்ரேலிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பியூபோர்ட் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் அமுலில் இருந்து வந்தாலும் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று தெற்கு லெபனானில் அமைந்துள்ள 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட்(Beaufort) கோட்டையை இஸ்ரேலிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

900 ஆண்டுகள் பழமையான லெபனான் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்: திருப்புமுனை வெற்றியா? | Israel Army Conquest 900 Yrs Old Lebanon Beaufort

பியூபோர்ட்(Beaufort) கோட்டையையும், அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளையும் தரைவழி தாக்குதல் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இஸ்ரேலிய படைகள் கோட்டையில் இஸ்ரேலிய நாட்டு தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்.

2வது முறையாக IPL கோப்பை வென்ற RCB: அதிரடி காட்டிய விராட் கோலி

2வது முறையாக IPL கோப்பை வென்ற RCB: அதிரடி காட்டிய விராட் கோலி

மூலோபாய முக்கியத்துவம்

பியூபோர்ட்(Beaufort) கோட்டை மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஸ்ரேலிய ராணுவத்தினர் வாதிடுகின்றனர்.

ஏனென்றால், கோட்டையில் இருந்து பார்த்தால் தெற்கு லெபனான் மற்றும் இஸ்ரேலின் வடக்கு பகுதியை துல்லியமாக கண்காணிக்க முடியும்.

இந்த உயரமான இடத்தை பயன்படுத்தி தான் லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலிய நகரங்கள் மீது துல்லியமான ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர்.

900 ஆண்டுகள் பழமையான லெபனான் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்: திருப்புமுனை வெற்றியா? | Israel Army Conquest 900 Yrs Old Lebanon Beaufort

நேற்று ஹிஸ்புல்லா படையினர் வடமத்திய இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்தே, பியூபோர்ட்(Beaufort) கோட்டையை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிரமாக இறங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பியூபோர்ட்(Beaufort) கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையின் முக்கிய திருப்புமுனை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தினரின் கட்டுப்பாடு விரிவுப்படுத்தப்படும் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US