அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருகிறோம்: இஸ்ரேல் பாதுகாப்பு படை அதிரடி தகவல்
ஹமாஸ் படையினருடனான போரில் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டத்திற்கு தயார்
இஸ்ரேல் ராணுவ படைக்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் இடையிலான போர் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.
ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு பிறகு போர் பிரகடனத்தை அறிவித்து பதிலடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா நகரை ராக்கெட்டுகள் மூலம் உருக்குலைத்து வருகின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸின் நான்கு முக்கிய தலைவர்கள் கொன்று இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் படையினருடனான சண்டை தொடர போவதாகவும், போரின் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய இஸ்ரேலிய ராணுவ படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, ஹமாஸ் படையினருக்கு எதிரான சண்டைக்கு இஸ்ரேலிய தற்காப்பு ராணுவ படை தயாராகி வருகிறது என தெரிவித்துள்ளார்.
IDF will continue fight against Hamas and is preparing for next stages
— NEXTA (@nexta_tv) October 20, 2023
The #Israel Defense Forces are preparing for the "next stages" in the fight against #Hamas as the conflict continues, #IDF spokesperson Daniel Hagari said Friday.
"The top priority of the country is to… pic.twitter.com/zm880R5ugT
அத்துடன் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதும், சாத்தியமான அனைத்து வகைகளிலும் காணாமல் போனவர்களை கண்டறிவதையும் இஸ்ரேல் உளவுத்துறை மற்றும் இராணுவம் மேற்கொள்ளும் என ஹகாரி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |