காஸாவில் கல்லறைகளை தரைமட்டமாக்கிய இஸ்ரேலிய டாங்கிகள்; வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் 70வது நாள் இன்று. இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் உள்ள கல்லறைகளை அழித்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Shajaiye நகரில் உள்ள துனிசிய கல்லறை (Tunisian cemetery) மற்றும் Jabaliyaவில் உள்ள அல்-பலூஜா கல்லறை (Al-Faluja cemetery) உட்பட ஆறு கல்லறைகளை இஸ்ரேலிய டாங்கிகள் அழித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

உலகில் எந்த நாட்டவருக்கும் Visa தேவையில்லை., பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாட்டின் அறிவிப்பு
அதன் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களிலும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இவற்றில், இஸ்ரேலிய டாங்கிகள் கல்லறைகள் மீது ஏறி சென்றதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
இதுவரை காஸாவில் 19,000 பேர் போரில் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் உள்ள கல்லறைகளில் இடப்பற்றாக்குறையால், வெகுஜன புதைகுழிகள் உருவாக்கப்படுகின்றன.
இதற்கிடையில், காஸா மீதான தாக்குதல்களை குறைக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், யாருடைய ஆதரவும் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஹமாஸை வேரறுக்கும் வரை இஸ்ரேலிய இராணுவம் போரிடும் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Satellite Images, Gazan Cemeteries Razed by Israeli Forces, Israeli tanks destroyed six gaza cemeteries, Gaza Strip