காசா நகரை விட்டு வெளியேறும் பாலஸ்தீனியர்கள்: தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்
காசாவில் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் நகரை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.
காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்
காசா நகரை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேலிய ராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா மக்கள் வழங்கிய தகவல்படி, இஸ்ரேல் ட்ரோன், தாக்குதல் விமானங்கள் மற்றும் ரிமோட் ரோபோக்கள் ஆகிய கொடிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இஸ்ரேலிய ராணுவம் நகரத்துக்குள் வேகமாக முன்னேறி வருவதாகவும், குடியிருப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
வெளியேறும் மக்கள்
காசாவின் மையப்பகுதியில் இஸ்ரேல் ராணுவ படை வேகமாக முன்னேறி வருவதால் பாலஸ்தீனியர்கள் கடற்கரை சாலை வழியாக வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் இஸ்ரேலின் தெற்கு பகுதியான எய்லாட்டில் உள்ள ஹோட்டலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் யாருக்கும் எந்தவொரு காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |