காசாவை வேட்டையாடும் இஸ்ரேல்! பிரான்ஸ், துருக்கி நாட்டு தலைவர்கள் கண்டனம்
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய கொடூர தாக்குதலுக்கு பிரான்ஸ், துருக்கி போன்ற உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காசா மருத்துவமனை மீது தாக்குதல்
காசா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேலிய படைகள் நகரை முழுவதுமாக கட்டுப்பாட்டில் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக காசாவில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் கொடூர் தாக்குதல் ஒன்றை அரங்கேற்றியுள்ளது.
இதில் பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டு இருப்பதுடன் 50 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு அடுத்து, கத்தார் மன்னரிடம் இது தொடர்பாக உரையாடிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எந்தவொரு நிலையிலும் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களை பட்டினிக்குள் தள்ளுவதை நிறுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முறையான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
.@WHO received reports of two strikes on the Nasser Medical Complex this morning, resulting in the deaths of at least 20 people, including four health workers and five journalists. Fifty others were injured, among them critically ill patients who were already receiving care.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) August 25, 2025
The… pic.twitter.com/XzTM4u0pAt
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கண்டனம்
இஸ்ரேலின் தாக்குதல் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் வெளியிட்ட கண்டன அறிக்கையில், இஸ்ரேல் அரசு மனிதகுலத்தின் பெயரால் மிகப்பெரிய அழித்தலை இடைவிடாமல் நடத்தி வருகிறது என தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |