போர் நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது தாக்குதல்: உயிரிழந்த 17 IDF வீரர்கள்
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலை வெள்ளிக்கிழமை லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹபூஷ் நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிறுவன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Zrarieh பகுதியில் நடத்திய தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய வீரர் உயிரிழப்பு
கடந்த வியாழக்கிழமை இரு தரப்பிற்கு இடையே நடந்த மோதலில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது.
இதன்மூலம் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை உயிரிழந்த இஸ்ரேலிய படையினரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
| ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |