காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 8 வயது சிறுவன் உட்பட சிலர் உயிரிழப்பு
காசா மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல்
திங்கட்கிழமை இஸ்ரேலிய ராணுவம் காசாவின் டெய்ர் அல் பாலா என்ற இடத்தில் நடத்திய குறிவைக்கப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 8 வயது சிறுவன் மாலிக் அபு ஷாவிக் மற்றும் அவரது தாத்தா ஹசன் அல் ஹனாக்ரா உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய ராணுவம் அகதிகள் தங்கியிருந்த கூடாரங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை குற்றஞ்சாட்டியுள்ளது.

3 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் இந்த தாக்குதலில் சிறுவனின் தாய் உட்பட 7 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய ராணுவம் விளக்கம்
ஹமாஸ் போராளி ஒருவரை குறிவைத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் யார் அந்த போராளி என்பது குறித்த எந்தவொரு விவரங்களையும் இஸ்ரேல் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை தெற்கு காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில் 13 வயது சிறுமி எய்லின் அல் ஃபாரா கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |