பேரழிவினால் பாதித்த சிரியா மீது கொடூரத்தை காட்டிய இஸ்ரேல்! ஐவர் பலியான சோகம்
சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் பலியாகியுள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உருக்குலைந்த சிரிய மாகாணங்கள்
கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் உருக்குலைந்தன.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், பல வீடுகள் தரைமட்டமாயின. இந்த பேரழிவில் இருந்து சிரியா இன்னும் மீண்டு வரவில்லை.
@Reuters
அதற்குள் அண்டை நாடான இஸ்ரேல் தனது கொடூரத்தை சிரியா மீது காட்டியுள்ளது. சிரியாவில் பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
ஐந்து பேர் பலி
குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என சிரிய அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சிலர் இந்தத் தாக்குதல் குறித்து கூறுகையில், 'முதலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்டது போன்ற நிலநடுக்கம் தான் என நினைத்தோம்' எனவும், 'அனைத்து சன்னல்களும் தெருவில் விழுந்தன, மக்கள் தெருக்களுக்கு ஓடினார்கள்' எனவும் தெரிவித்தனர்.
@Reuters
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிடம் இருந்து உடனடி அறிவிப்பு எதுவும் வெளியாகிவில்லை. மேலும், இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் டமாஸ்கஸ் அருகே உள்ள தளங்களை அடிக்கடி குறி வைக்கின்றன, ஆனால் அவர்கள் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைப்பது அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
@AP/PTI Photo
நிலநடுக்கத்தினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள் இந்த திடீர் தாக்குதலினால் பீதியடைந்துள்ளனர்.