சிரியா மீது சீறிப்பாய்ந்த இஸ்ரேலிய ராக்கெட்டுகள்: 4 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் படுகாயம்
சிரியா மீது இஸ்ரேல் நடத்திய புதிய ராக்கெட் தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் தாக்குதல்
இஸ்ரேலிய இராணுவத்தின் வான்வழி தாக்குதல்களால் சிரியாவில் புதிய வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள அல்-மஸ்சே(Al-Mazzeh) மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தின் மீது இஸ்ரேலின் 4 ராக்கெட்டுகள் தாக்கியதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் அல்-மஸ்சேவிற்கு செல்லும் சாலைகளை பாதுகாப்பு படையினர் தற்காலிகமாக மூடியுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகத்தில் வெளியான புகைப்படங்களில், டமாஸ்கஸ் பகுதியில் இருந்து புகை எழுவதை பார்க்க முடிகிறது.
4 பேர் உயிரிழப்பு
இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளன.
தெஹ்ரானை சேர்ந்த பிரஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட தகவலில், 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |