லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்தும் வேட்டை: 850-ஐ தாண்டிய உயிரிழப்பு
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.
தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்
கடந்த மார்ச் 2ம் திகதி முதல் லெபனான் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலிய படைகளின் இந்த தாக்குதலில் இதுவரை 850 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 850 பேரில் 100-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இஸ்ரேலின் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலில் இதுவரை 2000 க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வழங்கிய விளக்கம்
லெபனானின் குறிப்பிட்ட சில இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும், ஈரான் ஆதரவு பெற்ற முக்கிய பாலஸ்தீன நபர் ஒருவரை இந்த தாக்குதலில் வீழ்த்தி இருப்பதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன் கொல்லப்பட்டவர் ஈரானின் உளவு பிரிவில் செயல்பட்ட முக்கிய பயங்கரவாதி என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |