அமெரிக்கா, சுவிஸ், கனடா செல்ல தடை விதித்த பிரபல நாடு!
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல், அதன் குடிமக்கள அமெரிக்கா செல்ல தடை வித்துள்ளது.
அமெரிக்காவில் ஒமிக்கரான் மாறுபாடு பரவி வருவதால் இந்நடவடிக்கை எடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சிறப்பு அனுமதி இல்லாமல் குடிமக்கள் அமெரிக்க செல்ல தடை வதிப்பதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் Naftali Bennett அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க, இத்தாலி, பெல்ஜியம், ஜேர்மனி, ஹங்கேரி, மொராக்கோ, போர்ச்சுகல், கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை விமானப் பயணம் தடை பட்டியலில் சேர்க்க திங்களன்று அமைச்சர் ஒப்புதல் அளித்தனர்.
சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையின் படி அமைச்சர்கள் இந்த தடைக்கு ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை செவ்வாய்க்கிழமை முதல் அலுக்கு வரும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இஸ்ரேல் இதுபோன்று தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.