மும்முனை தாக்குதலுக்கு கிடைத்த வெற்றி: ஹமாஸ் பாதுகாப்பை உடைத்து முன்னேறும் இஸ்ரேல்
ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு காசாவின் முன்வரிசை பாதுகாப்பை உடைத்து முன்னேறி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னேறும் இஸ்ரேலிய படைகள்
ஹமாஸ் படையினரை கூண்டோடு அழிக்கும் முயற்சியில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
The IDF eliminated the head of Hamas anti-tank forces in the Gaza Strip, Muhmed Atsar. pic.twitter.com/0fvQYbqKve
— NEXTA (@nexta_tv) November 1, 2023
இதற்கு பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் படையினரின் முன்வரிசை பாதுகாப்பை உடைத்து இஸ்ரேலிய வீரர்கள் முன்னேறி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் தகவல்
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹாகர், ஹமாஸின் வடக்கு காசா முன்வரிசை பாதுகாப்பை உடைத்து இஸ்ரேலிய தரைப்படை முன்னேறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
❗️ The IDF broke through Hamas' front line of defense in the northern Gaza Strip#IDF Spokesman Rear Adm. Daniel Hagari says ground forces have broken through Hamas’s front lines of defense in the northern #Gaza Strip.
— NEXTA (@nexta_tv) November 1, 2023
"With advance planning, precise intelligence, and joint… pic.twitter.com/YfOwmrF7Xw
சிறந்த நுண்ணறிவு, முன்னோக்கிய திட்டம் மற்றும் கடல், தரை, வான் ஆகிய படைகளின் கூட்டு தாக்குதலின் மூலம் வடக்கு காசாவில் உள்ள ஹமாஸின் முன்வரிசை பாதுகாப்பை உடைத்து இருப்பதாக அதில் டேனியல் ஹாகர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |