உக்ரைனில் இருந்து திருடிய உணவு தானியங்களை வாங்கும் இஸ்ரேல்: ஜெலென்ஸ்கி பகீர் குற்றச்சாட்டு
உக்ரைனில் இருந்து திருடப்பட்ட உணவு தானியங்களை ரஷ்யா இஸ்ரேலுக்கு விற்பனை செய்ததாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவிலிருந்து திருடப்பட்ட உணவு தானியம்
கடந்த 2022ம் ஆண்டு உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து திருடப்பட்ட உணவு தானியங்களை ரஷ்யா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து திருடப்பட்ட உணவு தானியங்கள் நிரம்பிய ரஷ்ய சரக்கு கப்பல் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு சென்றடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் இருந்து திருடப்பட்ட உணவு தானியங்களை ரஷ்யா இஸ்ரேலுக்கு விற்பனை செய்ததாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி X தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் துறைமுகம் வந்தடைந்து இருக்கும் கப்பலில் உள்ள உணவு தானியங்கள் யாருக்கு சொந்தமானது என இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உக்ரைனில் இருந்து திருடப்பட்ட உணவு தானியங்களை வாங்கும் நாடுகள் மீது உக்ரைன் கடும் பொருளாதார நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் விமர்சனம்
இந்த நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி கருத்து ட்விட்டர் ராஜதந்திரம் என்று இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான் சார் விமர்சித்துள்ளார்.
உணவு தானியங்கள் திருடப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை உக்ரைன் வழங்கவில்லை என்றும், இருப்பினும் துறைமுகத்திற்கு வந்த கப்பல் ஆராயப்படும் என்றும் இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |