நிர்பந்தத்திற்கு அடிபணிய முடியாது... ட்ரம்ப் நிர்வாகத்திற்கு சவால் விடும் இஸ்ரேல்
கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்டத் தாக்குதல் சரியான முடிவு என இஸ்ரேலின் ஐ.நா. தூதர் வாதிட்டுள்ளார்.
ரகசிய ஒப்புதல்
அமெரிக்க நட்பு நாடான கத்தார் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அரிதாக கண்டிக்கும் நிலை உருவானது. செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய இராணுவ நடவடிக்கைக்கு ஜனாதிபதி ட்ரம்ப் உடன்படவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதுடன்,
இஸ்ரேல் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று கத்தாரை எச்சரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும் முன்னர் வரையில், அமெரிக்கா தரப்பில் இருந்து எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றே கத்தார் மறுத்துள்ளது.
இதனால், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் ரகசிய ஒப்புதல் அளித்துள்ளது உறுதியாகிறது. மட்டுமின்றி, இந்த முடிவை நியாயப்படுத்தி ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான இஸ்ரேலிய தூதர் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்ப இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என அவர் பதிலளித்துள்ளார். இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது, அவர்கள் மிகப்பெரிய ஆதரவை இஸ்ரேலுக்கு வழங்குகின்றனர், ஆனால் சில நேரங்களில் இஸ்ரேல் முடிவெடுக்கும், அதை அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தும் என விளக்கமளித்துள்ளார் டேனி டானன்.
இஸ்ரேல் நடவடிக்கை
இது கத்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, ஹமாஸ் தலைவர்களே இலக்கு. கத்தாருக்கு அல்லது எந்த அரபு நாட்டிற்கும் எப்போதும் இஸ்ரேல் எதிரியல்ல, ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் டேனி டானன் குறிப்பிட்டுள்ளார்.
கத்தார் மீதான தாக்குதலில் 6 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளன. ஆனால், மூத்த தலைவர்கள் தப்பியுள்ளனர். ஹமாஸுக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவலின்படி,
அல்-ஹய்யா மற்றும் முன்னாள் உயர்மட்டத் தலைவர் கலீத் மெஷால் உட்பட ஆறு ஹமாஸ் தலைவர்கள் தாக்குதல் நடந்த நேரத்தில் இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்தனர்.
ஆனால், இதுவரை இவர்களை எவரும் தொடர்புகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஒட்டுமொத்த அரபு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இஸ்ரேலுக்கு உரிய பதிலடி தரும் உரிமை கத்தாருக்கு உண்டு என்றும் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |