காசா மீது தொடர்ந்து குண்டு மழை பொழியும் இஸ்ரேல் போர் விமானங்கள்! வெளியான பரபரப்பு காட்சி
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பயங்கர மோதல் இடம்பெற்று வருகிறது.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள Sheikh Jarrah பகுதியிலிருந்து அரபு குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பொலிசாருக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக இந்த மோதல் ஏற்பட்டது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் தற்போது வரை சுமார் 192 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம் காசா போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சர்வதேச சமூகம் இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறு அழைப்பு விடுத்துள்ள போதிலும், இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது வான் தாக்குதல் நடத்தி வருகிறது.
காசாவில் உள்ள khan yunis பகுதியில் இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதலை நடத்தியது.
#BREAKING: Video shows massive airstrike at center of #KhanYunis in #Gaza minutes ago! #Israel Air Force is now hunting #PIJ terrorist leaders & commanders in response to their rocket attack at #Ashdod, #Ashkelon & #BeerSheva minutes ago. pic.twitter.com/0s9TjLgGr2
— Babak Taghvaee - Μπάπακ Τακβαίε - بابک تقوایی (@BabakTaghvaee) May 17, 2021
இஸ்ரேலின் Ashdod, Ashkelon மற்றும் BeerSheva பகுதிகளில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பான பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாதி தலைவர்கள் மற்றும் தளபதிகைளை குறிவைத்து khan yunis பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.