ஹமாஸின் முக்கிய தளபதி வான்தாக்குதலில் பலி! காஸா மீது முப்படைத்தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல்
ஹமாஸ் குழுவின் முக்கிய தளபதி வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உதவி
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் 9வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.
Reuters
இந்த நிலையில், ஹமாஸின் நக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு காஸா மக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றும் பாதுகாப்புப்படை எச்சரித்துள்ளது.
Chris Gordon/Air & Space Forces Magazine
முப்படை தாக்குதல்
இதற்கிடையில் வடக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என முப்படை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 3,500க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |