கொல்லப்பட்ட 2 இஸ்ரேலிய வீரர்கள்: மேற்குக் கரை நகரை தரைமட்டமாக்க நெதன்யாகு உத்தரவு
Israel demolishes West Bank Hebron checkpoint: மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இஸ்ரேலிய ராணுவம் இடித்து தள்ளி வருகிறது.
கொல்லப்பட்ட 2 இஸ்ரேலிய வீரர்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரான் நகருக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 2 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காரில் வந்த இரண்டு பாலஸ்தீனத் தாக்குதல்தாரிகள் திடீரென சோதனை சாவடியை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு அங்கு பணியில் இருந்த இஸ்ரேலிய வீரர்களும் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் தாக்குதலில் குதித்த அந்த இரண்டு பாலஸ்தீனர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அத்துடன் 2 இஸ்ரேலிய வீரர்கள் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 இஸ்ரேலிய வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நகரை தரைமட்டம் ஆக மாற்ற உத்தரவு
துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாக்குதல்தாரிகள் வந்த பாலஸ்தீன பகுதியை முழுமையாக தரைமட்டமாக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் மேற்குக் கரை முழுவதும் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஹெப்ரான் நகரில் உள்ள பாலஸ்தீன கட்டிடங்களை இஸ்ரேலிய படைகள் தீவிரமாக இடிக்க தொடங்கியுள்ளனர்.
ஆலிவ் பழ அறுவடை காலத்தில் பாலஸ்தீன பொதுமக்கள் மீது யூதக் குடியேறிகள் தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில் இச்சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.