போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா பொது சபை தீர்மானம்: திட்டவட்டமாக நிராகரித்த இஸ்ரேல்
போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நாவின் பொதுச் சபை தீர்மானத்தை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ராணுவ படை மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இடையே தீவிரமான சண்டை நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் ராணுவ பாலஸ்தீனத்தின் மீது தரைப்படைத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
Selcuk Acar – Anadolu Agency
இதுவரை நடைபெற்ற போர் தாக்குதலில் 8,500க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மறுப்பு
இந்நிலையில் ஐ,நாவின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்தம் தொடர்பான கோரியை திட்டவட்டமாக நிராகரிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
Mohammed Salem/Reuter
மேலும் ஹமாஸ் ஒரு பயங்கரவாதிகள், எனவே நாஜிக்கள், ஐஎஸ்ஐஎஸ் போன்றவர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டார்களோ அவ்வாறே ஹமாஸ் அமைப்பினர் அழிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹென் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |