7 முனைகளில் போரை நடத்தி வரும் இஸ்ரேல்.! பெருமைகொள்ளும் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார்.
அதில், நம் நாடு 7 முனைகளில் போரை நடத்தி வருவதாக பெருமையுடன் கூறியுள்ளார்.
"ஹமாஸ், ஈரான், ஹிஸ்புல்லா, மேற்குக் கரை பயங்கரவாதிகள், ஏமனின் ஹவுத்திகள் மற்றும் ஈராக்-சிரியா ஷியா போராளிகளின் தாக்குதல்களில் இருந்து எங்கள் நாட்டை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். " என்று அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை மீண்டும் வலியுறுத்திய நெதன்யாகு, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு நிச்சயமாக பழிவாங்குவேன். இஸ்ரேல் நிச்சயம் ஈரானை தாக்கும் என்று கூறினார்.
அதே நேரத்தில், ஈரான் தாக்குதலில் தனது விமான தளம் கீறல்கூட படவில்லை என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நியூவாடிம் விமான தளத்திற்கு கேலண்ட் விஜயம் செய்தார். இந்த விமான தளத்தை ஈரான் கடந்த அக்டோபர் முதலாம் திகதி குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட் விமான நிலையம் அருகே சனிக்கிழமை இரவு இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. சில தாக்குதல்கள் விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் நடந்தன, சில விமான நிலையத்தின் சுவற்றில் நடந்தன.
பல ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டு மையங்கள், ஆயுத கிடங்குகள், சுரங்கங்கள் மற்றும் தளங்களை அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சனிக்கிழமை தெரிவித்தன.
செப்டம்பர் 30-ஆம் திகதி லெபனானில் தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து 440 ஹெஸ்புல்லா உறுப்பினர்களை தாங்கள் கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Israel faces war on seven fronts,, Netanyahu, Oct 7 anniversary, Israeli Defense Forces. Lebanon, Hamas, Iran, IDF, Hezbollah, Houthis, Yeman