மலைக்கு அடியில் ட்ரோன் தொழிற்சாலை: ஹிஸ்புல்லாவின் நிலத்தடி கட்டமைப்பை கண்டுபிடித்த இஸ்ரேல்
ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலத்தடி ட்ரோன் ஏவுதளத்தை இஸ்ரேலிய படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினரின் பிரம்மாண்ட ட்ரோன் தளம்
தெற்கு லெபனான் பகுதியில் உள்ள மலைக்கு அடியில் ஹிஸ்புல்லா படையினரால் கட்டப்பட்ட நிலத்தடி ட்ரோன் தயாரிப்பு மற்றும் ஏவுகணை ஏவுதளம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தடி ட்ரோன் ஏவுதளம் இஸ்ரேலிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Majdal zoun கிராமத்திற்கு அருகே அமைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைக்கு அடியில் சுமார் பல நூறு மீட்ட நீளத்திற்கு இந்த ட்ரோன் தொழிற்சாலை மற்றும் வான்படை தளம் அமைந்துள்ளதோடு சுமார் 29 மீட்டர் ஆழம் வரையிலும் செல்கிறது.
இந்த ட்ரோன் ஏவுதளம் எஃகு கதவுகள்(Blast door) மூலம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த சுரங்க தொழிற்சாலையில், 30 கிலோ வெடி மருந்துகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தயார் நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மலையின் தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஏவுதளக் குழாய்கள் நிலத்தடியில் இருந்து வெளியே தெரியாதவாறு இருப்பதோடு இஸ்ரேல் மீது ட்ரோன்களை செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |