ஏவுகணைகள் கூட சிதறிவிடும்., பின்லாந்துக்கு இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு அறிவிப்பு
பின்லாந்துக்கு இஸ்ரேல் அதன் வான் பாதுகாப்பு அமைப்பை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தது.
நேட்டோவில் அங்கம் வகிக்கும் பின்லாந்திற்கு 340 மில்லியன் டொலர்களுக்கு 'டேவிட் ஸ்லிங்' வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கும் ஒப்பந்தத்தை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பின்லாந்து உடனான இந்த ஒப்பந்தத்தை வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என இஸ்ரேல் வர்ணித்தது.
இஸ்ரேலிய-அமெரிக்க நிறுவனங்களால் கூட்டாக உருவாக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அமைப்பு, பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் ட்ரோன்களை அழிக்க முடியும்.
செப்டம்பரில், ஆரோ 3 ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்பை ஜேர்மனிக்கு விற்க 3.5 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டது.
நீண்ட தூர ஆரோ 3 அமைப்பும் இஸ்ரேலிய-அமெரிக்க கூட்டு முயற்சியாகும், எனவே விற்பனையை இறுதி செய்வதற்கு முன் அமெரிக்காவின் ஒப்புதல் தேவை.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து, பின்லாந்து அதன் இராணுவ நடுநிலைக் கொள்கையை கைவிட்டு, கடந்த ஆண்டு நேட்டோவில் சேர விண்ணப்பித்தது.
இந்த ஆண்டு ஏப்ரலில் பின்லாந்து அதிகாரப்பூர்வமாக நேட்டோ ராணுவக் கூட்டணியில் 31வது உறுப்பினராக இணைந்தது. பின்லாந்தின் நேட்டோ இணைப்புக்கு அண்டை நாடான ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Israel David’s Sling air defense system, NATO Finland