நான்காவது டோஸ் தடுப்பூசிக்கு தயாராகும் பிரபல நாடு!
இஸ்ரேலில் பூஸ்டர் தடுப்பூசியை அடுத்து நான்காவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுவருகிறது.
கொரோனா வைரஸின் புதிய Omicron மாறுபாட்டை எதிர்த்துப் போராடும் முயற்சியில், "ஆபத்தில் உள்ள மக்களுக்கு" நான்காவது டோஸ்COVID-19 தடுப்பூசியை வழங்க இஸ்ரேல் பரிசீலிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் நஃப்தலி பென்னட் (Naftali Bennett) இன்று கூறினார்.
கடந்த மாதம், இஸ்ரேல் Omicron தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டினர் நுழைவதையும், சர்ச்சைக்குரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்புத் தடமறிதலையும் தடை செய்தது.
இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமையன்று 55 பேருக்கு Omicron தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இஸ்ரேல் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் உலகின் முதல் மற்றும் மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தை தொடங்கியது, அதன்படி இதுவரை 4.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இஸ்ரேல் சமீபத்தில் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.