தொலைக்காட்சி நேரலையின் போது ஏவுகணை தாக்குதலில் நொடியில் தவிடு பொடியான பல அடுக்கு கட்டிடம்! நடுங்க வைக்கும் காட்சி
காசாவில் பிபிசி தொலைக்காட்சி நேரலையின் போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பல அடுக்கு கட்டிடம் தவிடு பொடியான காட்சி வெளியாகி நடுங்க வைத்துள்ளது.
சமீபத்தில் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பயங்கர மோதல் இடம்பெற்று வருகிறது.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள Sheikh Jarrah பகுதியிலிருந்து அரபு குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பொலிசாருக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக இந்த மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், காசா நகரில் பிபிசி அரபிக் செய்தியாளர் Adnan Elbursh நேரலையில் தகவல் அளித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் கிட்டதட்ட 100 மீ தொலைவில் இருந்த கட்டிடம் தாக்குதலில் சிக்கி தவிடு பொடியான நடுங்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவில், Adnan Elbursh தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு கவச உடை அணிந்த படி தகவல் அளித்துக்கொண்டிருக்கும் போது, குண்டு வெக்கும் சத்தம் கேட்கிறது.
இதனையடுத்து, Adnan Elbursh பயந்து அங்கிருந்து செல்ல, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் பின்னால் இருந்த படி கட்டிடத்தின் ஒரு பக்கம் சரிந்து விழுகிறது.
சில நொடிகளில் மற்றொரு புறம் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது, இதில் முழு கட்டிடமும் தவிடு பொடியாகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதலை பேச்சு வார்த்தை அல்லது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.