குளித்து சில நாட்கள் ஆகிவிட்டது...! இஸ்ரேலிய படைகளால் காசாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை
தண்ணீர் இல்லாததால் குளித்து சில நாட்கள் ஆகிவிட்டது என பாலஸ்தீனத்தின் குடிமகன் அந்த நாட்டு ஊடகம் ஒன்றில் குறிப்ப்பிட்ட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர்
இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 10வது நாளாக நீடித்து வருகிறது.
ஹாமஸ் அமைப்பினரின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் குடி தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை தடை செய்தனர்.
இதனால் பாலஸ்தீனத்தில் வாழும் மக்கள் குடிக்க, குளிக்க, அத்தியாவசியத் தேவைகளுக்காக தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Children and families in Gaza have practically run out of water.
— UNICEF (@UNICEF) October 16, 2023
They are now forced to use dirty water from wells, increasing risks of waterborne diseases.
We need an immediate humanitarian pause to ensure unhindered and safe access to children and families in Gaza. pic.twitter.com/GtVbCPdJQP
குளித்து சில நாட்கள் ஆகிவிட்டது]
இந்நிலையில் காசாவின் தெற்கே உள்ள ரஃபா எல்லையில் உள்ள 7 குழந்தைகளின் தாய் மற்றும் 23 வயது பெண்மணியான அகமது ஹமீது தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விளக்கியுள்ளார்.
அதில், "நான் குளித்து சில நாட்கள் ஆகிவிட்டது. கழிவறை செல்வது கூட கடினமாக உள்ளது, தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
கடைகளில் எந்தவொரு பொருட்களும் இல்லை. அப்படியே ஓரிரு இடங்களில் ஏதாவது பொருட்கள் கிடைக்கின்றன, அவ்வாறு கிடைத்தாலும் விலை உச்சத்தில் இருக்கிறது.
“There is no clean drinking water, no sufficient food, and no bathrooms.”
— UNICEF (@UNICEF) October 14, 2023
Time is running out for children in Gaza. UNICEF is continuing to respond to their critical needs but access is becoming increasingly difficult and dangerous. pic.twitter.com/aludnWyuhc
கடைகளில் கொஞ்சம் சீஸ் துண்டுகள், டூனா மீன் கேன்களும் மட்டுமே இருக்கின்றன. இந்த சூழ்நிலையை மிகுந்த கடுமையாக உணர்கிறேன். ஏதும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன்" என உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் படைகளால் பாலஸ்தீனியர்கள் பாதிப்பு: 101.4 கோடி நிதியுதவி அறிவித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |