ஹமாஸ்-இஸ்ரேல் போர்: மயக்க மருந்து இல்லாமல் கால் துண்டிக்கப்பட்ட 14 வயது சிறுமி!
காசா போர் பாதிப்பில் சிக்கிய 14 வயது சிறுமி, மயக்க மருந்து இல்லாமல் இரு கால்களையும் துண்டித்த கொடுமைக்கு பிறகு சிகாகோவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீட்டின் மீது பாய்ந்த குண்டு
காசாவில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கையின் விளையாக கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் திகதி காசாவை சேர்ந்த 14 வயது சிறுமி Leyan வீட்டின் மீது குண்டு பாய்ந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் இரு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதிலும் துரதிஷ்டவசமாக காசாவில் மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதால், மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கால்கள் அகற்றப்பட்டுள்ளது.
Leyan -வின் கதை போரினால் ஏற்பட்ட எண்ணற்ற துயரங்களில் ஒன்றாக சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
சிகாகோவில் சிகிச்சை
மனிதாபிமான அமைப்புகளின் உதவியுடன், சிறப்பு சிகிச்சைக்காக Leyan சிகாகோவுக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.
Leyan லாப நோக்கமற்ற பாலஸ்தீன் அமைப்பின் மூலமாக சிகாகோவின் Shriner’s மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போர் அராஜகங்கள் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி Leyan, மருத்துவராகி பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவ இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |